நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

24 நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடர் துவங்கியது: முதல் ஆட்டத்தில் துருக்கியை வென்றது இத்தாலி

ரோம்:

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 அணிகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடரின் 16ஆவது தொடர் போட்டிகள் இன்று நள்ளிரவு தொடங்குகிறது. வரும் ஜூலை 11-ம் தேதி வரை இந்த கால்பந்து போட்டிகள் நடைபெறும்.

யூரோ கால்பந்து தொடரின் வரலாற்றில் முதன்முறையாக இம் முறை ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த 11 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெம்பிலி மைதானத்தில் நடைபெறுகிறது. தொடரில் கலந்து கொண்டுள்ள 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஹங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

எஃப் பிரிவானது குரூப் ஆஃப் டெத் என அழைக்கப்படுகிறது. தொடக்க நாளான இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ரோம் நகரில் இத்தாலி - துருக்கி அணிகள் மோதின. 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றுள்ளது. 

2018 உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணியே இம்முறை மகுடம் சூடக்கூடிய அணியாக விதந்தோதப்படுகிறது. அந்த அணியில் அந்தோனி கிரீஸ்மான், ஆலிவர் கிரவுடு, பால் போக்பா, கரீம் பென்ஸிமா, என்’கோலோ கான்டே போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர்.

கோப்பையை வெல்லக்கூடிய மற்றொரு பெரிய அணியாக இங்கிலாந்து கருதப்படுகிறது. அந்த அணியில் மார்கஸ்ராஷ்போர்ட், ஹாரி கேன், ஜோர்டன் ஹென்டர்சன் மற்றும் ரீஸ் ஜேம்ஸ் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக வலம் வருகின்றனர்.

நடப்பு சாம்பியனான போர்ச்சுக்கல் அனைத்து வழிகளிலும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். ஆனால் மீண்டும் ஒரு முறை அந்த அணி கிறிஸ்டியானோ ரொனால்டோவையே சார்ந்திருக்கக்கூடும். அவருக்கு உறுதுணையாக சிறந்த நடுவரிசை வீரரான புருனோ பெர்ணான்டஸ் செயல்படக்கூடும். 

இருப்பினும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது போர்ச்சுக்கல் அணிக்கு கடும் போராட்டமாகவே இருக்கும் என்றே கருதப்படுகிறது. ஏனெனில் போர்ச்சுக்கல் அணி குரூப் ஆஃப் டெத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset