நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.3 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சு

புத்ராஜெயா:

மலேசியாவில் 1.3 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

3,030,096 தனி நபர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்படுள்ளதாகவும் 1,331,262 பேருக்கு இருதவணைகள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில் நாடு முழுவதும் இதுவரை 4,361,358 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக இன்று டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூரில் 1,74,302 பேருக்கும், சரவாக்கில் 141,972, பேராக்கில் 126,876, ஜொகூரில் 126,673, கோலாலம்பூரில் 122,797 பேருக்கும் இருதவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நேற்று ஒரேநாளில் 133,804 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா மேலும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் குடிமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை நாடு எட்டிப்பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset