நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MCO விதி மீறல்கள்: 748 பேருக்கு அபராதம்; 32 பேர் கைது

கோலாலம்பூர்:

முழு முடக்கநிலையின்போது (MCO) விதிமுறைகளை மீறியதாக நேற்று (ஜூன் 12) 748 தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.

விதிமீறல்களுக்காக 32 பேர் கைதாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத குற்றத்துக்காக 152 பேருக்கும், முகக்கவசம் அணியாததற்காக 137 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

கட்டட, வணிக வளாகங்களுக்குள் நுழையும்போது விவரங்களைப் பதிவு செய்யாததால் 135 பேர் சிக்கி உள்ளனர்.

வாகனங்களில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற 54 பேர் சிக்கி உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று மட்டும் 94,095 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 984 சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப், இத்தகைய நடவடிக்கையின்போது 5 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset