நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டதாக தகவல் இல்லை: அமைச்சர் ரசோல் வாஹித்

கோலாலம்பூர்:

நாட்டில் காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டதாக எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டத்தோ ரசூல் வாஹித் Dato Rosol Wahid தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் நிலவும் விலையானது அனைவரது வாங்கும் சக்திக்கு உட்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடுகையில் பல இடங்களில் காய்கறி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

"உதாரணமாக பண்டிகைக் காலத்தின்போது ஒரு கிலோ மிளகாயின் விலை 15 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் விலை இப்போது 6 ரிங்கிட்டாக குறைந்துள்ளது.

சந்தைக்குப் புதிதாக வரும் காய்கறிகளின் விலை சற்று அதிகமாக இருக்கக்கூடும். பழைய காய்கறிகளின் விலை குறைவாக இருக்கலாம்.
"எனினும் விலை அதிகமாக இருப்பதாக கருதும் பட்சத்தில் பொதுமக்கள்  எங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம்," என்று துணை அமைச்சர் Rosol Wahid தெரிவித்துள்ளார்.

தக்காளி, வெள்ளரிக்காய், இஞ்சி உள்ளிட்டவற்றின் விலைகள்  கடந்த இரு வாரங்களில் வெகுவாக அதிகரித்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தபோதே அவர் மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset