நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பெரும் போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தினார் ஜோகோவிச்: பிரென்ச் ஓபன்

பாரிஸ்:

களிமண் தரையில் சிங்கமான ரபேல் நடாலை நேற்று முன் தினம் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச். 

மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் 8-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இருவரும் சாம்பியன் பட்டத்திற்கான பலப்பரீட்சை நடத்தினர்.

அவ்வளவு எளிதாக சிட்சிபாஸை வெல்ல முடியவில்லை. துவக்கத்தில் இருந்தே ஜோகோவிச்சுக்கு கடும் நெருக்கடியை அவர் கொடுக்க ஆரம்பித்தார்.

Roland Garros 2021: Stefanos Tsitsipas vs John Isner preview, head-to-head  & prediction

முதல் செட்டில் இருவரும் மாறிமாறி கேம்ஸை கைப்பற்றினர். இதனால் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சிட்சிபாஸ் 7(8)- 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார்.

அதே உத்வேகத்துடன் விளையாடி ஜோகோவிச் சுதாரிப்பதற்குள் 2-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார்

3-வது செட்டை கைப்பறினால் சாம்பியன் பட்டத்தை வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சிட்சிபாஸ் களம் இறங்கினார். ஆனால், இதுவரை கற்றுக்கொண்ட அனைத்து வித்தைகளையும் மொத்தமாக வெளிப்படுத்தினார் ஜோகோவிச். இதனால் 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.

நீண்ட நேரம் போட்டி நடைபெற்ற நிலையில், ஜோகோவிச் ஆட்டத்திற்கு முன் சிட்சிபாஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. 4-வது செட்டையும் ஜோகோவிச் 6-2 என எளிதில் கைப்பற்றினார்.

Novak Djokovic wins 2021 French Open- All numbers and records attached to  his 19th Grand Slam title - Hindustan Times

வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டிலும் ஜோகோவிச் கையே ஓங்கியது. இதன்மூலம் 6-4 என கடைசி செட்டையும் கைப்பற்றி 6(6)-7(8), 2-6, 6-3, 6-2, 6-4 என போராடி வெற்றி பெற்றார்.

சுமார் 4.40 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் 3-2 என கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி 2-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார். மேலும், இது அவரின் 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset