நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம் தரக்கூடாது: தாஜுதீன் அப்துல் ரஹ்மான்

கோலாலம்பூர்:
பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம் தரக்கூடாது என அம்னோ தேர்தல் பிரிவு இயக்குநர் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க அராசங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அம்னோ உறுப்பினர்கள் உதவிகரமாக இருக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

"பெருந்தொற்றுப் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கம் வெற்றிபெற நாம் அனைவருமே உதவிகரமாக இருக்கவேண்டும். 15வது பொதுத்தேர்தலுக்காக மாநில மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகள் அளவில் தயார் நிலையில் உள்ள அம்னோவின் தேர்தல் பணிக்குழு இந்த இக்கட்டான வேளையில் அரசாங்கத்தின் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கையில் உதவவேண்டும்," என்று தாஜுதின் அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டுள்ளார்.

எப்போதும் அரசியல் செயவதை அனைவரும் கைவிட வேண்டும்  என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நாடு முழுவதும் 3.5 மில்லியன் அம்னோ உறுப்பினர்களை கிருமி தொற்றுப் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடச் செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset