நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தடுப்பூசிகளால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை: சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்:

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நாட்டில் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.

ஆயிரம் பேரில் 2.4 பக்க விளைவு சம்பவங்கள் மட்டுமே பதிவாகி உள்ளன என்றும் தீவிர பக்க விளைவுகள் காரணமாக மருத்துவமனையில் 0.09 விழுக்காட்டினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஜூன் 12ஆம் தேதி வரை சுமார் 4.7 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு தலைவலி, சோர்வு, ஊசி போட்ட இடத்தில் லேசான தடிமன் போன்ற பொதுவான பக்க விளைவுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

"0.09 விழுக்காட்டினருக்கு மட்டுமே அதிக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலும் பலர் உரிய சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்குப் பிறகு விரைவாக வீடு திரும்பியுள்ளனர்," என்று சுகாதார அமைச்சர் ஆதம்பாபா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset