
செய்திகள் மலேசியா
மலாய் ஆட்சியாளர்கள் நாளை சந்திக்கின்றனர்
கோலாலம்பூர்:
பெருந்தொற்று மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாளை மலாய் ஆட்சியாளர்கள் இடையேயான சந்திப்பு நடைபெற உள்ளது.
மாமன்னர் நாளை ஆட்சியாளர்களை சந்தித்துப் பேச இருப்பதை அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
கடந்த வாரம் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை மாமன்னர் சந்தித்துப் பேசினார். அப்போது பெருந்தொற்று நெருக்கடி குறித்து அவர் கருத்துகளை கேட்டறிந்ததாக தெரிகிறது.
மாமன்னரைச் சந்தித்த பிறகு அவருடன் பகிர்ந்துகொண்ட கருத்துகள் குறித்து கட்சித் தலைவர்கள் சில விவரங்களைத் தெரிவித்தனர்.
இந் நிலையில் நாளை புதன்கிழமை அன்று மலாய் ஆட்சியாளர்களை மாமன்னர் சந்திக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரமே அறிவிக்கப்பட்டது.
நாளை பிற்பகல் 2.30 மணியளவில் மலாய் ஆட்சியாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கும் எனத் தெரிகிறது. அரண்மனை காப்பாளர் அறிக்கை ஒன்றில் இதை உறுதி செய்துள்ளார்.
நாளைய கலந்துரையாடலின்போது பெருந்தொற்று உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆட்சியாளர்கள் பேசுவார்கள் எனத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm