
செய்திகள் மலேசியா
தடுப்பூசி போடுவதில் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்தது மலேசியா
கோலாலம்பூர்:
தடுப்பூசி போடுவதில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது மலேசியா.
நேற்று திங்கள்கிழமை ஒரே நாளில் சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டுவிட்டபரில் பதிவிட்டுள்ள சுகாதார அமைச்சர் ஆதம்பாபா நேற்றைய தினம் 197,963 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் 142,890 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 55,073 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் இதுவரை 4,688,233 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மலேசியாவில் மேலும் 1,413,039 தனி நபர்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே தேசிய தடுப்பூசித் திட்டம் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் புத்தாக்க அமைச்சருமான கைரி ஜமாலுதீன் மிக விரைவில் நாள்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் போடவேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கை ஜூலை மாதம் எட்டிப்பிடிக்க இயலும் என்றும், ஆகஸ்டு மாதம் இந்த எண்ணிக்கை 300,000 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm