
செய்திகள் மலேசியா
ஒரு பேரழிவைத் தவிர்த்துள்ளோம் என்கிறார் பிரதமர்
புத்ராஜெயா:
முழு முடக்க நிலையுடன் கூடிய MCO 3.0 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாடு எதிர்கொண்ட ஒரு பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், MCO 3.0ன் முதலாவது கட்டத்தின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொற்றுப் பரவல் விகிதம் தற்போது குறையத் தொடங்கி உள்ளதாக தெரிவித்த அவர், தொற்று வரைபடத்தில் மேல்நோக்கிச் சென்ற அம்புக்குறியீடு தற்போது கீழ்நோக்கி திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த மே 29ஆம் தேதி 9,020ஆகப் பதிவான அன்றாட புதுத்தொற்றுகளின் எண்ணிக்கை, திங்கட்கிழமை 4,949ஆக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
"நாட்டின் சுகாதார அமைப்பால் புதிய நோயாளிகளையும் ஏற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்க முடிகிறது. குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது.
"இதன்மூலம் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது தெரிகிறது. நாம் ஒரு பேரழிவைத் தவிர்த்துள்ளோம்," என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.