
செய்திகள் மலேசியா
தரவுகளும் சோதனைகளும் வெற்றி பெற்றால் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளை கலந்து போட அரசு அங்கீகரிக்கும்: கைரி ஜமாலுதீன்
கோலாலம்பூர்:
கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (என்ஐபி) ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஹீட்டோரோலஜஸ் தடுப்பூசிகளின் சாத்தியக்கூறுகள் அல்லது இரண்டு வெவ்வேறு வகையான தடுப்பூசிகளின் கலவையை அரசாங்கம் தற்போது ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
மலேசிய ஆக்ஸ்போர்டு & கேம்பிரிட்ஜ் அலுமினி நெட்வொர்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வெபினாரில் பேசிய கைரி உரையாற்றினார். அப்போது அவர், ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை முதல் மற்றும் இரண்டாவது டோஸாக போட்டுக் கொண்டவர்களின் தரவு எவ்வாறு உள்ளது என்று உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அந்தத் தடுப்பூசி செயல்திறன் விகிதங்களைப் பார்க்கும் போது அது நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியது என்பதை வெளிப்படுத்தினார்.
"ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் தரவுகளைப் பார்க்கும்போது, பரம்பரை அணுகுமுறையைப் பயன்படுத்துவதால் தடுப்பூசி பெற்றுக் கொண்டவருக்கு நடுநிலையான எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியும்,
"இது இறுதியில் புதிய கோவிட் -19 வகைகளின் தாக்கத்திலிருந்து அவற்றைப் பாதுகாக்கும்" என்று அவர் கூறினார்.
"முதல் டோஸுக்கு அஸ்ட்ராஜெனெகாவைப் பயன்படுத்தி ஹீட்டோரோலஜஸ் தடுப்பூசிகள் மற்றும் இரண்டாவது டோஸுக்கு ஃபைசர் தடுப்பூசி பற்றி ஜெர்மனியிலிருந்து நாங்கள் பெற்ற சில ஆதாரப்பூர்வமான சர்வதேசத் தகவல்கள் உள்ளன. இது தொற்றின் வீரியத்தை முறிப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கூடுதல் தரவைப் பெறுவதற்கு முன்பு விரைவான முடிவை எடுக்க நாங்கள் விரும்பவில்லை, ”என்று வெபினாரின் போது அவர் கூறினார்.
ஹீட்டோரோலஜஸ் தடுப்பூசி முறையைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை கடந்த வாரம் என்ஐபி நிர்வாகக் கூட்டத்தில் இன்ஸ்டிடியூட் ஆப் கிளினிக்கல் ரிசர்ச் (ஐசிஆர்) இயக்குனர் டாக்டர் பி.கலைராசு முன்வைத்தார்.
போதுமான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டவுடன், அவரும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவும் என்ஐபியின் இணைத் தலைவர்களாக முடிவெடுப்பதற்கு முன்பு, அதன் குழுவிற்கு என்ஐபியின் பணிபுரியும் தொழில்நுட்பக் குழுவால் பரிந்துரைகள் செய்யப்பட வேண்டும் என்று கைரி கூறினார்.
தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் விநியோக தடைகள் காரணமாக பலவகைப்பட்ட தடுப்பூசிகளையும் அரசாங்கம் கவனித்து வருகிறது என்றார்.
"இது குறித்து பணிக்குழு தெளிவுபடுத்தியதும், நானும் சுகாதார அமைச்சரும் சுகாதாரக் குழுத் தலைவரும் அரசாங்கத்திடம் எங்கள் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் ஒப்படைப்போம்.
ஆல்பா மற்றும் பீட்டா விகாரங்கள் போன்ற புதிய கோவிட் -19 திரள்களிலிருந்து பாதுகாக்க உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு, பரம்பரிய கலவைத் தடுப்பூசி முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சோதனைகள் காட்டுகின்றன என்றும் அமைச்சர் பேசினார்.
தரவுகளும் சோதனைகளும் வெற்றி பெற்றால் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளை கலந்து போட அரசு அங்கீகரிக்கலாம் என்று கூறினார் அமைச்சர் கைரி ஜமாலுதீன்.