
செய்திகள் மலேசியா
இந்திய தொழிலாளி குற்றம் சாட்டிய உணவகத்தின் மீது அதிரடி சோதனை: மலேசிய மனித வள அமைச்சு, உள்துறை அமைச்சு நடவடிக்கை
பெட்டாலிங் ஜெயா:
கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் பெட்டாலிங்ஜெயா வட்டாரத்தில் இயங்கும் இந்திய உணவகத்தைப் பற்றியும் அங்கு அன்னியத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் பரவலாக வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு வந்தது.
அந்த உணவகத்தில் கடும் வேதனையை அனுபவித்ததாக இந்தியாவுக்கு சென்ற வேலாயுதம் என்ற அன்னியத் தொழிலாளி பகிரங்கமாக தொலைக்காட்சியில் குற்றம்சாட்டி பேசினார். இளம் தொழிலாளர்களுக்கு செக்ஸ் தொல்லை தந்ததாகவும், மறுப்பவர்களை அடிப்பதாகவும் அவர் சொன்னார். பல மாதங்களாக ஒழுங்காக சம்பளம் தராமலும், வேலை பெர்மிட் எடுக்காமலும் முதலாளிகள் இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
சமூக ஊடகங்களில் குறிப்பாக இணைய தளங்களில் அந்தச் செய்தி காட்டு தீ போல் பரவியது.
அன்னியத் தொழிலாளர்களை பெரும்பாலான தொழிலகங்களில் நலலபடியாகத் தான் நடத்தி வருகிறார்கள். ஓரிரு இடங்களில் நடைபெற்று முறை தவறிய சம்பவங்களினால் ஒட்டு மொத்த உணவகத் தொழிலையே குற்றம் கூறும் போக்கு கண்டிக்கத்தக்கது.
இருப்பினும் இந்திய தொழிலாளியின் குற்றச்சாட்டை கண்ணுற்ற மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அந்த உணவகத்தை உடனடியாக சோதனை செய்ய உத்தரவிட்டார்.
இன்று காலைமுதல், பெட்டாலிங் ஜெயா காவல் துறை, பெட்டாலிங் ஜெயா மாநகர மன்ற ஊழியர்கள், உள்துறை அமைச்சக அதிகாரிகள், மனித வள அமைச்சு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அந்த உணவகத்தில் ஊழியர்கள் மீது அத்துமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm