நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சட்டசபை விரைவில் கூடும்; சுல்தானின் ஒப்புதல் பெற்ற பின் தேதி அறிவிக்கப்படும்: மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருதீன் அறிவிப்பு

ஷா ஆலம்:

மாநில சட்டமன்றத்தை விரைவில் கூட்டுவதற்கு சிலாங்கூர் சுல்தானின் அனுமதியைப் பெறுவேன் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி இன்று தெரிவித்தார்.

கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க செலவினம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் மீண்டும் கூட்ட வேண்டும் என்று பேரரசர் நேற்று அளித்த ஆணையைத் தொடர்ந்து இதனை இன்று சிலங்கூர் முதல்வர் அறிவித்திருக்கிறார்.

“நான் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகருடன் கலந்துரையாடி விரைவில் அதற்கான ஆணையை அமல்படுத்தத் தொடங்குவேன்.

"இந்த கூட்டத்தின் முடிவுகள் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷாவுக்கு சிலாங்கூர் மாநில சட்டமன்றம் மீண்டும் கூட்டப்படுவதற்கான ஒப்புதலுக்காக வழங்கப்படும்" என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் விடுத்த ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களின் முடிவு மலேசியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமையும் என்றும் அமிருதீன் கூறினார்.

"நாட்டின் அரசியலமைப்பு ஜனநாயக அமைப்பின் மேலாதிக்கத்தை பாதுகாப்பதில் பேரரசர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன்; ஆதரிக்கிறேன், இதனால் நிர்வாக, சட்டமன்ற மற்றும் நீதித்துறைகளுக்கு இடையில் சமநிலையைப் பேண முடியும்," என்று அவர் கூறினார்.

செவ்வாயன்று பிரதமர் டான்ஸ்ரீ முஹைதீன் யாசின், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். அன்றாட கோவிட் -19 தொற்று எண்ணிக்கை 2,000 க்கும் குறையும் என்றும் தொற்றுக் குறையும்பட்சத்தில் விரைவில் படிப்படியாக ஒவ்வொரு துறையாகத் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறி இருந்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset