
செய்திகள் மலேசியா
நாடாளுமன்ற கூட்டம் எப்போது?: பிரதமர் அலுவலகம் விளக்கம்
புத்ராஜெயா:
நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாக மாமன்னர் அறிவுறுத்தி இருப்பதை பிரதமர் தமது கவனத்தில் கொண்டிருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாமன்னரின் அண்மைய அறிக்கை தொடர்பில் கூட்டரசு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது.
"இதற்கு முன்பு மாமன்னருடனான சந்திப்புகளின்போது பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அவசரகால சட்டங்களை அமல்படுத்துதல், தேசிய தடுப்பூசித் திட்டம், பொருளாதார ஊக்க தொகுப்புகள் மற்றும் நிதியுதவி நாடாளுமன்ற அமர்வுகள்,தேசிய மீட்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாமன்னரிடம் பிரதமர் தெரிவித்துள்ளார்.
"இந்நிலையில் மாமன்னரின் அண்மைய கருத்துக்கேற்ப கூட்டரசு அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
முன்னதாக எதிர்வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வாய்ப்புள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்திருந்தார்.