
செய்திகள் மலேசியா
நூறு கிலோ போதைப் பொருள் கடத்தல்: அண்மையில் குழந்தை பெற்ற இளம் தாய், கணவர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
அண்மையில் குழந்தை பெற்றெடுத்த பெண், அவரது கணவர் மற்றும் 21 வயது இளைஞர் ஆகிய மூன்று பேர் மீதும் நூறு கிலோ போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு செராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
21 வயதான Gan Pei Hong, 31 வயதான அவரது கணவர் Cha Wee Sang, Yap Yau Yang ஆகிய மூவரும் கடந்த 5ஆம் தேதி தாமான் சேகரில் இந்த குற்றத்தைப் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
அன்றைய தினமே தாமான் புக்கிட் ஹிஜாவ் பகுதியில் 98.4 கிலோ ஹராயின் சார்ந்த போதைப் பொருட்களைக் கடத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டையும் Yap Yau Yang எதிர்கொண்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முறையீடு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. போதைப்பொருள் கடத்தலுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை அல்லது 30 ஆண்டு கால ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
அண்மையில்தான் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் என்பதை கருத்தில் கொண்டு Gan Pei Hongக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாய்மொழியாக விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தார் மாஜிஸ்திரேட். எனினும் Gan Pei Hongஐ மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 11:11 am
மலிவு விலையிலான சிறப்பு வகை முட்டைகள்: நாளை முதல் விற்பனைக்கு வரும்
July 31, 2025, 11:08 am
அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்த வேண்டாம்: மொஹைதின்
July 31, 2025, 11:07 am
ஏமாற்றப்பட்டிருந்தால் மத்திய அரசாங்கத்தை விட்டு ஏன் மஇகா வெளியேறவில்லை?: புவாட் கேள்வி
July 30, 2025, 11:15 pm