நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

SPM தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசியை ஜூலை மாதம் இறுதிக்குள் போட திட்டம்: கைரி ஜமாலுதீன்

கோலா லம்பூர்:

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்தி படிவம் ஐந்து மாணவர்கள் அடுத்த மாதம் தங்கள் கோவிட் -19 தடுப்பூசி பெறத் தொடங்குவார்கள் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

"மாணவ மாணவிகளுக்காக அதனை நாங்கள் ஜூலை மாதத்திற்குள் செய்ய முயற்சிக்கிறோம்.

“ஜூலை மாதத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை படிவம் ஐந்து மாணவர்களுக்கு செலுத்த திட்டமிட்டு வருகிறோம். ஏனெனில், கல்வி அமைச்சரும் அத் திட்டம் அமலாவதை விரும்புகிறார்.

இதனை இன்னும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) முடிவு செய்யவில்லை, ஆனால், தேர்வு எழுதும் மாணவர்கள், படிவம் ஐந்து மற்றும் படிவம் ஆறு மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற விருப்பத்தை கல்வி அமைச்சர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆகவே, ஜூலை மாதத்திற்குள் அவர்களுக்கு தடுப்பூசிகளைக் கொடுக்க வேண்டும், ”என்றும் மாணவர்களுக்கான தடுப்பூசிகளைப் பள்ளிகளில் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் கைரி தெரிவித்தார்.

புதன்கிழமை, சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ், ஃபைசர்-பயோஎன்டெக் தயாரித்த கொமிர்னாட்டி தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

359 வது மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (பி.கே.பி.டி) கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களைப் பயன்படுத்துவதற்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி நிபந்தனையுடன் பதிவு செய்ய முன்பு அங்கீகரிக்கப்பட்டிருந்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset