செய்திகள் மலேசியா
அமைச்சர் தக்கியுதீன் ஹாசனுக்கு எதிராகப் புகார்: விசாரணை நடப்பதாக IGP தகவல்
கோலாலம்பூர்:
பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹாசனுக்கு (Takiyuddin Hassan)
எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைவர் டத்தோஸ்ரீ அக்ரைல் சானி அப்துல்லாஹ் சானி Acryl Sani Abdullah Sani இன்று இத் தகவலை உறுதிப்படுத்தினார். மேலும் தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு காவல்துறை தலைமையகமான புக்கிட் அமான் விசாரணை நடத்திவரும் அதேவேளையில் எந்த சட்ட விதியின்கீழ் விசாரணை நடைபெறுகிறது என்பதை காவல்துறை தலைவர் தெரிவிக்கவில்லை.
மாமன்னரது உத்தரவை மீறியதாக கூறப்படும் புகாரை எதிர்கொண்டுள்ளார் தக்கியுதீன்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை இயன்ற விரைவில் நடத்தவேண்டும் என மாமன்னர் அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்தைப் புறக்கணிக்கும் வகையில் தக்கியுதீன் தன்மூப்பான கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.
நாட்டில் அமலில் உள்ள அவசரநிலையின் காலம் குறித்து அமைச்சரவை மாமன்னரிடம் முன்வைக்கும் பரிந்துரையின் பேரில் முடிவு எடுக்கப்படும் என்று தக்கியுதீன் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
மேலும் ஆகஸ்ட் 1ஆம் தேதியோடு அவசரநிலையை நீட்டிப்பது அல்லது முடிவுக்கு கொண்டு வருவது குறித்து மாமன்னர் தமது அதிகாரத்தை முடிவெடுக்க வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து சர்ச்சை எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
