
செய்திகள் கலைகள்
"Bhag Milkha Bhag" திரைப்படத்தின் நிஜ நாயகன் இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்காசிங் கொரோனாவால் மரணம்: தலைவர்கள் இரங்கல்
பஞ்சாப்:
இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்காசிங் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 91 வயதான மில்காசிங் இளம் தடகள வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக விளங்கியவர்.
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் காலமானார். மில்காசிங் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் ஆர்ழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவருடைய வாழ்க்கை வரலாறு ''பாக் மில்கா பாக்" - "Bhag Milkha Bhag" எனும் பெயரில் ஹிந்தியில் திரைப்படமாக தயாராகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் கதாநாயனாக பர்ஹான் அக்தர் சிறப்பாக நடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 7:48 am
90களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கோவாவில் ஒன்றுகூடல்
July 28, 2025, 3:38 pm
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
July 28, 2025, 11:18 am
மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
July 26, 2025, 4:11 pm
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன்
July 23, 2025, 4:41 pm
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
July 22, 2025, 10:00 am
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
July 20, 2025, 10:26 am