
செய்திகள் மலேசியா
சிலங்கூர் பாங்கியில் புதிய மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது: நூர் ஹிஷாம் அப்துல்லாஹ்
கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலத்தின் பாங்கியில் புதிதாக குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நேற்று முதல் முறையாக அங்கு கோவிட் -19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.
சுகாதாரத் துறை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் இன்று அதிகாலை அந்த மருத்துவமனையை அதிகாரப்பூர்மாக திறந்து வைத்திருக்கிறார்.
அந்த புதிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் ஒருவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
"இன்று 14 நோயாளிகள் அங்கு உள்ளனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.வில்) அனுமதிக்கப்பட்டுள்ளார். HPKK UKM மருத்துவமனை புதிதாக பாங்கி நகரில் கட்டப்பட்டுள்ளது. நேற்று முதல் அந்த மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வட்டாரத்தில் இந்த மருத்துவமனை பொது மக்களுக்கு சிறப்பான சேவையாற்றும்" என்று நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.