நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

விமானப் போக்குவரத்து துறை 2022இல் இயல்புநிலைக்கு திரும்பும்: டான்ஸ்ரீ டோனி ஃபெர்னான்டஸ்

கோலாலம்பூர்:

விமானப் போக்குவரத்து துறை எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இயல்புநிலைக்கு திரும்பும் என ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குநர் டான்ஸ்ரீ டோனி ஃபெர்னான்டஸ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து தொடங்கிய பிறகும், அனைத்துலக எல்லைகள் திறக்கப்பட்ட பிறகும் அந்த இயல்புநிலை சாத்தியமாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விமானப் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய அம்சங்களைக் களையும் வகையில் நல்ல கொள்கைகளை வகுப்பதுடன் அவற்றை அரசாங்கம் உரிய வகையில் செயல்படுத்த வேண்டும் என்று டோனி ஃபெர்னான்டஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

"நாட்டின் எல்லைகளைத் திறக்க வேண்டும் எனில், பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனில் எத்தகைய என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும்.

"அநேகமாக எதிர்வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்துக்குள் இந்த விவகாரத்துக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். அச் சமயம் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்துக்கும் சில அனைத்துலகப் பயணத்துக்கும் அனுமதி கிடைக்கக்கூடும்," என்றார் டோனி ஃபெர்னான்டஸ்.

Universiti Kebangsaan Malaysia ஏற்பாடு செய்திருந்த இணைய வழியிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடியால் உலகின் பெரும்பாலான நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் விமானச் சேவைகள் முடக்கப்பட்டதை அடுத்து அனைத்துலக விமான நிறுவனங்கள் பலவும் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்து, பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

இந் நிலையில், விமானப் போக்குவரத்து துறை எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இயல்புநிலைக்கு திரும்பும் என நம்பிக்கையூட்டி உள்ளார் டான்ஸ்ரீ டோனி ஃபெர்னான்டஸ்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset