
செய்திகள் மலேசியா
கொரோனா போரை வெல்ல மலேசியர்களிடம் ஒற்றுமை இல்லை: நூர் ஹிஷாம் கவலை
கோலாலம்பூர்:
கொரோனா கிருமிக்கு எதிராக போராடுவதை விட்டுவிட்டு மலேசியர்கள் பெருந்தொற்றை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மலேசியர்கள் இடையே ஒற்றுமை நிலவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் கோடிகாட்டினார்.
"கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிருமித்தொற்றின் தாக்கம் நிலவி வரும் சூழ்நிலையில், இப்போதும்கூட SOPக்களை பொதுமக்கள் பின்பற்றாதது முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
"ஒற்றுமை இல்லாததே இதற்கான காரணம் என்று கருத வேண்டியுள்ளது. பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக அதை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பான கருத்துக்களைக் கொண்டு நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்," என்று உளவியல் மற்றும் முதலுதவி தொடர்பாக Universiti Pendidikan Sultan Idris ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கில் பேசும்போது டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
பெருந்தொற்று காலத்தில் முழுமையான பரிசீலனைகளுக்குப் பின்பே எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதாக உறுதி அளித்த அவர், மக்கள் SOPக்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm