நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இதுவரை 5.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் இதுவரை 5.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றுள் முதல் மற்றும் இரண்டாம் தவணை நடுப்பூசிகளும் அடங்கும்.

வெள்ளிக்கிழமை வரை 3,957,687 பேர் முதல் தவணை ஊசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும், 1,553,033 பேருக்கு இரண்டாம் தவணை ஊசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் ஆதம் பாபா கூறினார்.

ஒட்டுமொத்தத்தில் 5,510,720 பேர் ஊசி போட்டுக் கொண்டனர் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை ஐந்து மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இம்மாநிலங்களில் ஏராளமானோருக்கு இரு தவணை தடுப்பூசிகளுல் போடப்பட்டு விட்டதாக அப் பதிவு தெரிவிக்கிறது.

சிலாங்கூரில் 202,143, சரவாக்கில் 174,545, ஜோகூரில் 151,140, பேராக்கில் 144,086 மற்றும் கோலாலம்பூரில் 141,045 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வெள்ளிக்கிழமை அன்று 180,066 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில்  147,616 பேருக்கு முதல் தவணையும், 32,450 பேருக்கு இரண்டாம் தவணையுமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நேற்று வரை 14,877,336 பேர் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset