நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாலியல் புகார்; முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

சென்னை:

துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை காவல் துறையினர் அதிகாலையில் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் அதிமுகவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

மலேசியாவைச் சேர்ந்த சாந்தினி என்பவர் தமிழ் சினிமாக்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். அவருடன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். இருவருக்குள்ளும் மனக் கசப்பு ஏற்பட்டது. அவருக்கு தொல்லை தந்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவரால் உண்டான கர்ப்பத்தைக் கலைத்ததாகவும் அடுக்கடுக்கான புகார்களுடன் சென்னை காவல் துறை ஆணையரிடம் சாந்தினி புகார் அளித்தார்.

அதன்பின் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார். இன்று அவரை தமிழகக் காவல்துறை கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் கைது செய்துள்ளனர். அவரை இன்றே சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கப்படுவார் என்று போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset