நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 மாநிலங்களுக்கு 18,702 புதிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்: கல்வி அமைச்சர் ராட்ஸி

கோலாலம்பூர்: 

DG 41 தர புதிய ஆசிரியர்களை பணியமர்த்தப் போவதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மூத்த கல்வி அமைச்சர் டத்தோ மொஹமத் ராட்ஸி இது குறித்து கூறுகையில், நாட்டில், குறிப்பாக நான்கு மாநிலங்களில் குறிப்பிட்ட சில பாடங்களுக்கான ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாகக் கூறினார். மொத்தம் 18,702 சிறப்பு ஆசிரியர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூலை 7 முதல் கல்வி அமைச்சகம் புதிய ஆசிரியர் சேர்ப்பு குறித்து விளம்பரப்படுத்தத் தொடங்கும் என்றார். முதல் கட்ட வேலைவாய்ப்புகள் அக்டோபர் மாதத்தில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

"இந்தப் புதிய வேலைவாய்ப்பு, ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் குறிப்பிட்ட சில பாடங்களைக் கற்பிப்பவர்கள் ஆகிய இரண்டின் அடிப்படையில் செய்யப்படுவதாகும்" என்று இன்று ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமைச்சர் கூறினார்.

புதிய ஆசிரியர்கள், குறிப்பாக ஆங்கிலம், வரலாறு, இஸ்லாமிய ஆய்வுகள், சிறப்பு கல்வித் திட்டம் போன்ற பாடங்களுக்கு சிலாங்கூர், ஜோகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவதாக அமைச்சர் ராட்ஸி பட்டியலிட்டார்.

தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பு கற்பித்தல் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாது என்றும், வேலைக்கு ஏற்றவர்களாக இருந்தால் மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களையும் வேலைக்கு அமர்த்துவதற்கு MoE திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

"கற்பித்தல் பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால்,  புதிய ஆசிரியர்களுக்கான தேர்வில் மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களையும் கருத்தில் கொள்வோம்" என்று கல்வி அமைச்சர் ராட்ஸி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset