செய்திகள் மலேசியா
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ற இலக்கை அடைவோம்: பிரதமர் நம்பிக்கை
புத்ராஜெயா:
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ற இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் இருந்து வாங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியும் என பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தால் வாங்கப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் உரிய நேரத்தில் மலேசியா வந்தடைவதை உறுதி செய்ய அரசு கடுமையாக முயற்சிக்கும் என்றார் பிரதமர்.
"தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான ஜமாலுதீன் கைரி தேவையான தடுப்பூசிகள் கிடைக்கும் பட்சத்தில் இலக்குகளை அடையமுடியும் என்பதை பல முறை தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை வாங்கக்கூடாது என்றோ அதை தடுக்கவேண்டும் என்பதோ அரசாங்கத்தின் எண்ணமல்ல.
"அனைத்தையும் ஒன்றிரண்டு மாதங்களில் முடித்துவிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். தடுப்பூசி "விநியோகிப்பாளர்களை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஏனெனில், அவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
எனவே, நமக்கான முறை வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். எனினும், நாம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் தடுப்பூசிகள் வந்து சேரும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
"அதேவேளையில் தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு நடவடிக்கைகளை நாம் வேகப்படுத்தியாக வேண்டும். முன்பதிவுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காலை முதல் இரவு வரை அனைவரும் உத்வேகத்துடன் பணியாற்றுகிறார்கள்," என்றார் பிரதமர் மொஹிதீன் யாசின்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
