செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் தீவிரமாகி வரும் கொரோனா; கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன: இந்தோனேசிய சுகாதாரத்துறை
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி உள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. அலுவலகங்களில் பணியாளர்களைக் குறைத்தல், மத வழிபாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. தடுப்பூசி செலுத்தப்படுவது தீவிரப்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நேற்று மட்டும் 13,737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்தோனேசியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் இதுவரை 8% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
