
செய்திகள் விளையாட்டு
கடைசி நேரத்தில் புதிய விதிமுறைகள்: இந்திய ஒலிம்பிக் சங்கம் கண்டனம்
டோக்கியோ:
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் புதிதாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது நியாயமற்ற செயல் என இந்திய ஒலிம்பிக் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து பங்கேற்கும் வீரர்கள் ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்துக்கு வந்ததும் மூன்று நாட்களுக்கு எந்த குழுவுடனும் தொடர்பு இருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த வீரர்களின் பயிற்சி பாதிக்கப்படும் என்றும் வெற்றி வாய்ப்பு பறிபோகக் கூடும் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும், குறிப்பிட்ட அந்த 11 நாடுகளின் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்காக தங்கள் நாட்டிலிருந்து ஜப்பானுக்குப் புறப்படும் ஒரு வாரத்திற்கு முன்பே தினமும் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"போட்டி தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்புதான் வீரர்கள் அனைவரும் விளையாட்டு கிராமத்துக்கு வந்து சேர்வர். இந்நிலையில் மூன்று நாட்கள் அவர்களுக்குப் பயிற்சி இன்றி வீணாகும்.இந்த 3 நாள் பயிற்சிதான் அவர்களை போட்டிக்கான தயார் நிலையில் உச்சத்துக்குக் கொண்டு செல்லும். 5 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிக்காக மிகத் தீவிரமாக உழைத்துள்ளனர் இந்திய தடகள வீரர்கள். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் 5 நாட்களுக்கு முன்பு இவ்வாறு பாகுபாடு காட்டுவது நியாயமற்றது," என இந்திய ஒலிம்பிக் சங்கம் மேலும் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 11:30 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி தோல்வி
May 1, 2025, 10:22 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
May 1, 2025, 7:28 am
IPL 2025: சஹலின் சுழலில் சிக்கிய சி எஸ் கே பஞ்சாபிடம் சரண்: தொடரைவிட்டு வெளியேறியது
April 30, 2025, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி வெற்றி
April 29, 2025, 10:57 am
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் அசத்தல்: 35 பந்துகளில் சதம் அடித்தார் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி
April 29, 2025, 10:32 am
முஹம்மத் சாலாவின் தலையில் மதுபானம் ஊற்றப்படவில்லை
April 29, 2025, 9:24 am
கனடாவில் மோசமான கிண்டலுக்கு ஆளான லியோனல் மெஸ்ஸி
April 28, 2025, 10:16 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: நபோலி வெற்றி
April 28, 2025, 9:14 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை 20ஆவது முறையாக லிவர்பூல் வென்றது
April 28, 2025, 8:48 am