செய்திகள் உலகம்
வடகொரியாவில் கொரோனா இல்லை என்று கூறுவது பொய்: உலக சுகாதார அமைப்பு
பியோங்யங்:
வடகொரியாவில் ஜூன் 10 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் அந் நாடு தெரிவித்துள்ளது. ஆனால், இதில் உண்மை இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. வடகொரியாவில் கொரோனா இல்லை என்று கூறுவது பொய் என்பதை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது.
ஜூன் மாதம் 10 ஆம் தேதிவரை சுமார் 30,000 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்புக்கு அளித்த அறிக்கையில் வடகொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது.
ஆனால் உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், “733 பேர் வடகொரியாவில் ஜூன் 4-10 தேதிகளில் பரிசோதிக்கப்பட்டனர், அவர்களில் 149 பேர் காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார கட்டமைப்புகளில் பின்தங்கியதாக கருதப்படும் வடகொரியா கொரோனா தொற்றை எப்படி கையாள போகிறது என்று அச்சம் உலக நாடுகளிடம் ஏற்பட்டுள்ளது.
உலக முழுவதும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து வடகொரியா எல்லை மூடல், வர்த்தக தடை, சுற்றுலா பயணிகளுக்கு தடை போன்றவற்றை விதித்து பிற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டை தனிமைப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார பாதிப்பை வடகொரியா எதிர் கொண்டுள்ளது.
முன்னதாக, வடகொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. இந் நிலையில், வடகொரியாவில் உணவுப் பஞ்சம் நிலவுவதாகத் தகவல்கள் கசிந்தன. இதையும் வடகொரியா மறைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாக வெளியான தகவலை அதிபர் கிம் சில நாட்களுக்கு முன்னர் ஒப்புக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:13 pm
அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சார்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
