
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் பல இடங்களில் எஸ்பிஐ ATM, Cash டெபாசிட் இயந்திரங்களில் நூதன திருட்டு: காவல் துறை தகவல்
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஜூன் 22) செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
"எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் தமிழகம் முழுவதிலும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.வேறு மாநிலங்களைச் சேர்ந்தோர் இதனை செய்ததற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரித்து வருகிறோம்.
பணம் எடுக்கும் மற்றும் டெபாசிட் செய்யும் வசதி கொண்ட இயந்திரங்களில் நூதன முறையில் இந்த கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது. இத்தகைய திருட்டு நடப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறை.
தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 48 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தமாக உள்ள 18 புகார்களில் 7 புகார்களில் மட்டுமே குறைந்த தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு எந்த இழப்பும் இல்லை. வங்கிக்குத்தான் இழப்பு.
தொழில்நுட்ப குறைபாட்டினால் தான் இது நடந்துள்ளது. ஆனால், இப்போது அந்தக் குறைபாட்டை சரிசெய்துள்ளனர். இனி இதுபோன்று செய்ய முடியாது.
3, 4 பேர் தான் இதில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் என தெரிகிறது. எல்லா புகார்களிலும் சிசிடிவி கேமரா பதிவு இருக்கிறது. எஸ்பிஐ வங்கியில் மட்டும்தான் திட்டமிட்டு இது நடைபெற்றுள்ளது.
இது குறித்து விசாரிக்க, ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் சில மாநிலங்களிலும் இதேபோன்று நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஏடிஎம்களில் இனி பணம் எடுக்க முடியாது. பணம் டெபாசிட் செய்யலாம்.சென்னையில் பல ஏடிஎம்களில் இவ்வாறு நடைபெற்றுள்ளது. மற்ற மாவட்டங்கள் குறித்து விசாரித்து வருகிறோம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கொள்ளையர்கள் ஹரியாணாவுக்கு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தனிப்படையினர் ஹரியாணா விரைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm
ஆர்டிபி கல்வி நிறுவனம் & அறக்கட்டளையின் வெள்ளிவிழா
July 25, 2025, 8:09 pm
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
July 25, 2025, 4:51 pm
வைகோ உட்பட 6 தமிழக எம்பிக்கள் ஓய்வு
July 24, 2025, 9:08 am