
செய்திகள் மலேசியா
ஐந்து மாத குழந்தைக்கு மது புகட்டிய ஆடவர் கைது
ஜார்ஜ் டவுன்:
குழந்தைக்கு மது புகட்டிய ஆடவர் ஒருவர் பினாங்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இக்குற்றத்தைப் புரிந்தபோது எடுக்கப்பட்ட காணொலிப் பதிவொன்று வெளியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19 வயதான அந்த ஆடவர், தெலுக் பஹாங் பகுதியில் திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக தென்மேற்கு மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் கமருல் ரிசால் ஜெனால் தெரிவித்துள்ளார்.
அந்த ஆடவருடன் சம்பந்தப்பட்ட காணொலி தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"ஓர் ஆடவர் குழந்தையை 'பீர்' அருந்த வைக்கும் அந்தக் காணொலிப் பதிவு 30 நொடிகள் நீடிக்கிறது. சமூக வலைத்தளங்களில் வெளியானதால் இது ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"அந்தக் குழந்தையின் தந்தைதான் அந்த ஆடவர் என்பது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவர் தடுத்து வைக்கப்பட்டார். அந்த ஐந்து மாத ஆண் குழந்தை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
"தற்போது அந்தக் குழந்தை நலமாக உள்ளது. கைதான சந்தேக நபர் மீது ஏற்கெனவே 14 குற்றப்பதிவுகள் உள்ளன. மேலும், அவர் கண்காணிப்பில் உள்ளார்," என்று காவல்துறை கண்காணிப்பாளர கமருல் ரிசால் மேலும் தெரிவித்துள்ளார்.
அக் குறிப்பிட்ட காணொலிப் பதிவில் ஒரு பெண்ணின் குரலும் ஒலிக்கிறது. காணொலி வெளியானதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் இச் செயலுக்கு கடும் கண்டனமும் எழுந்தது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm