
செய்திகள் வணிகம்
இந்தியாவுக்கான பாமாயில் ஏற்றுமதி: இந்தோனேசியாவை முந்தியது மலேசியா
கோலாலம்பூர்:
இந்தியாவுக்கான பாமாயில் ஏற்றுமதியில் இந்தோனீசியாவை முந்தியது மலேசியா
கடந்த நவம்பரில் மலேசியாவின் ஏற்றுமதியானது 2.42 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கச்சா பாமாயிலை இந்தியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்த நாடாக மலேசியா உருவெடுத்துள்ளது என ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் இந்தோனீசியா இரண்டு மில்லியன் டன் பாமாயிலை மட்டுமே இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதனால் அதன் ஏற்றுமதி விகிதம் 32 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளதாக ராய்டர்ஸ் கூறுகிறது.
ஏற்றுமதி பாமாயிலுக்கு கூடுதல் லெவி கட்டணங்கள் விதிக்கப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவே, அதன் ஏற்றுமதி அளவு குறைய காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் மலேசிய பாமாயில் ஏற்றுமதியாளர்கள் பலனடைந்துள்ளதாக Solvent Extractors Association தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் பாமாயிலின் விலையில் சில தள்ளுபடிகளை அறிவிப்பதன் மூலம் இந்திய இறக்குமதியாளர்களின் கவனத்தை ஈர்த்து உலகச் சந்தையில் கூடுதல் பகுதியை மலேசிய ஏற்றுமதியாளர்கள் தங்கள் வசமாக்கி வருகின்றனர்.
ஏற்றுமதியாகும் ஒரு டன் பாமாயிலுக்கு இந்தோனீசிய அரசு 438 அமெரிக்க டாலரை தீர்வைக் கட்டணமாக வசூலித்துள்ளது. ஆனால் மலேசிய ஏற்றுமதியாளர்கள் சுமார் 90 டாலர்கள் மட்டுமே செலுத்துகின்றனர் என்று அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 4:44 pm
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm