நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹிஷாமுதீனுக்கு ஆதரவாக அம்னோவின் 25 எம்பிக்களிடம் சத்தியப் பிரமாணம் பெற்றோம்: நஸ்‌ரி பரபரப்புத் தகவல்

கோலாலம்பூர்:

வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் துன் ஹுசேனுக்கு ஆதரவாக அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேரிடம் சத்தியப் பிரமாணம் பெற்றதாக முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்‌ரி அசீஸ் தெரிவித்துள்ளார்.

அம்னோ தலைவர் சாஹித் ஹமிதியையும், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹீமையும் எதிர்க்கும் பொருட்டே இவ்வாறு செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அன்வாரைப் பிரதமராக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் அவர்கள் இருவரும் சத்திய பிரமாணங்களைப் பெற்று வந்ததாகக் கூறியுள்ளார்.

எனினும், நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்து, டான்ஸ்ரீ மொஹிதீன் யாசினுக்குப் பதிலாக ஹிஷாமுதீன் துன் ஹுசேனை பிரதமராக்க விரும்பியதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

25 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வார் பிரதமராவதை ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தவே தாம் நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

"கடந்த ஜூன் 9ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திப்பதாக மாமன்னர் முடிவு செய்ததை அடுத்து, இரண்டு வாரங்களாக நான் சத்திய பிரமாணங்களை திரட்டி வந்தேன். அம்னோவைப் பிரதிநிதித்து மாமன்னரைச் சந்தித்த அஹ்மத் சாஹித் ஹமிதி மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம் என்பதை வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கம்," என்று நஸ்‌ரி கூறியுள்ளார்.

சத்திய பிரமாணங்களை வாங்குவதன் மூலம் அரசாங்கத்தை கைப்பற்ற ஒரு குழு முயற்சித்து வருவதாக கடந்த வாரம் அம்னோ பொதுச்செயலர் அஹ்மத் மஸ்லான் தெரிவித்திருந்தார்.

"இத்தகைய சூழ்நிலையில் பாரிசான் நேசனலின் செய்தித்தொடர்பாளராக ஹிஷாமுதீன் துன் ஹுசேனை முன்னிறுத்த நாங்கள் முடிவு செய்தோம். அன்வாரை பிரதமராக்க இதற்கு முன்பும் ஆதரிக்கவில்லை, இனிமேலும் ஆதரிக்க மாட்டோம் என்பதை ஹிஷாமுதீன் தெரிவிக்க வேண்டும் என நினைத்தோம்.

"எனவே, அரசாங்கத்தை மாற்ற வேண்டும், டான்ஸ்ரீ மொஹிதின் யாசினை பிரதமர் பதவியில் இருந்து விலக்கி வேறொருவரை நியமிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் திரட்டிய சத்தியப் பிரமாணங்கள் ஹிஷாமுதீனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை மாமன்னரிடம் அளிக்கப்பட்டனவா என்பது உறுதியாகத் தெரியவில்லை," என்று நஸ்‌ரி அசீஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அன்வார் இப்ராஹிமும் தமக்கு ஆதரவாக 115 எம்பிக்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார் என்றும், அதுகுறித்த விவரங்கள் மாமன்னரிடம் கடந்த வாரம் நிகழ்ந்த சந்திப்பின்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மலாய் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset