
செய்திகள் இந்தியா
கடன்வாங்கி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் சொத்துக்களில் ரூ.8,441 கோடி பொதுத்துறை வங்கிக்கு மாற்றம் : அமலாக்கத்துறை
புதுடெல்லி :
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட சொத்துக்களில்ரூ.8,441கோடியை அவர்களால் பாதிக்கப்பட்டு கடுமையான நிதி சூழலில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தங்களது நிறுவனங்களின் பெயர்களில் கடன்களை வாங்கிக் கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர்.
இதனால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுமார் ரூ.22 ஆயிரத்து 585 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்இது தொடர்பாக சிபிஐயும் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் நேற்று ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மேற்கண்ட மூன்று குற்றவாளிகளின் உள்ளூர் மற்றும் வெளிநாடுகள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் குறித்து தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வரப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலுள்ள மூவருக்கும் சொந்தமான சுமார் ரூ.18 ஆயிரத்து 170 கோடி மதிப்பிலான சொத்துக்களையும், வெளிநாட்டிலுள்ள ரூ.969 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கும் பணிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விவாகாரம் குறித்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த சொத்துக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளின் போலி பெயர்கள், மூன்றாவது நபர்கள் மற்றும் உறவினர்களின் பெயர்களில் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத்தவிர விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகிய மூன்று குற்றவாளிகளும் பிரிட்டன், ஆன்டிகுவா, பார்டுடா ஆகிய நாடுகளில் தற்போது இருந்து வருவதால் அவர்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில் மூன்று குற்றவாளிகளிடம் இருந்து முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து சுமார் ரூ.8ஆயிரத்து 441 கோடியை மதிப்பிலான நிதி தொகையை அவர்களால் பாதிக்கப்பட்டு கடுமையான நிதி சூழலில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு தற்போது பிரித்து வழங்கப்பட்டு, அதுகுறித்த பரிமாற்றமும் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am
கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்
July 29, 2025, 10:21 am