செய்திகள் விளையாட்டு
ரசிகர்கள் வெற்றி உற்சாகத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது: டோக்கியோ ஒலிம்பிக் பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
டோக்கியோ:
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒலிம்பிக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜப்பான் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக போட்டிகளை காண தினந்தோறும் 10,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்படுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒலிம்பிக் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
* ரசிகர்கள் எந்த நிலையிலும் கொண்டாட்ட மனநிலையில் மைதானத்திற்கு வர வேண்டாம்.
* போட்டிகளின் போது எந்தவிதமான கொண்டாட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது.
* ரசிகர்கள் வெற்றி உற்சாகத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது.
* ஒருவர் மற்றவரோடு கைகளை தட்டி சியர்ஸ் செய்யக்கூடாது.
* பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்த வேண்டும்.
* பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
* போட்டியாளர்களிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற தடை.
* மது வகைகளை மைதானங்களுக்கு கொண்டு வருவதற்கு தடை.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:27 pm
சீ போட்டியின் கராத்தே பிரிவில் தேவேந்திரன், ஷாமலா ராணி தங்கப்பதக்கம் வென்றனர்
December 12, 2025, 10:37 am
மலேசியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை ரேச்சல் இயோ வென்றார்
December 11, 2025, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சமநிலை
December 11, 2025, 8:59 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் வெற்றி
December 10, 2025, 8:44 am
சீ விளையாட்டுப் போட்டி: தாய்லாந்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
December 10, 2025, 8:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
December 10, 2025, 8:34 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
December 9, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
December 8, 2025, 12:47 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
December 8, 2025, 12:46 pm
