
செய்திகள் உலகம்
மியான்மர் நாட்டு இளம் பெண்ணைக் கொடுமைப்படுத்தி கொலை செய்த இந்தியப் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த மியான்மர் நாட்டு இளம் பெண்ணைக் கொடுமைப்படுத்தி கொலை செய்த இந்தியப் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கெவின் செல்வம் அவரது மனைவி காயத்ரியுடன் வசிக்கின்றார். இவர்களின் வீட்டில் மியான்மரைச் சேர்ந்த பியாங் காய்டான் என்ற 24வயதுடைய பெண் வேலைக்கு சேர்ந்தார். அவரை பட்டினி போடுவது, இரும்புக் கம்பியால் சூடு வைப்பது, துடைப்பம் மற்றும் கட்டைகளால் அடிப்பது என காயத்ரியும் அவரது தாய் பிரேமாவும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதற்கு கெவின் செல்வமும் உடந்தையாக இருந்துள்ளார்.
இவர்களது தொடர் தாக்குதலால் பியாங் காய்டான் எலும்பு முறிவு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு பலியானார். கொலை வழக்கில் கைதான காயத்ரிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்குகளில் தற்போது விதிக்கப்பட்டுள்ளதே அதிகபட்ச தண்டனை. கெவின் செல்வம், பிரேமா ஆகியோர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது. அவர்களுக்குரிய தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் சுந்தர் பிச்சை
July 26, 2025, 2:57 pm
சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
July 26, 2025, 10:11 am
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் மரணம்
July 26, 2025, 9:52 am
பெருவில் பள்ளத்தில் விழுந்த பேருந்து: 15 பேர் மரணம்
July 25, 2025, 4:31 pm