
செய்திகள் உலகம்
பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்: உலகப் பணக்காரர் வாரன் பஃபெட் அறிவிப்பு
சியேட்டல்:
பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா இருவரும் பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்றனர்.
உலகம் முழுவதும் பல்வேறு தொண்டுகளை இந் நிறுவனம் செய்து வருகிறது. அண்மையில் கூட இந்த அமைப்பு கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கும், மற்ற தடுப்பூசிப் பணிகளுக்கும் 1.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். இல்லற வாழ்வில் இனி பிரிந்து பயணித்தாலும், மனிதாபிமான நடவடிக்கைகளில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தொண்டு நிறுவனம் சார்ந்து எங்களது பணிகளில் இணைந்து பயணிப்போம் என்று அவர்கள் இருவரும் கூட்டாகக் கூறியிருந்தாலும், அவர்களின் பிரிவு அறிவிப்புக்குப் பின்னர் தொண்டு நிறுவனத்தின் பணிகள் ஆட்டம் கண்டன.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் லட்சியமே எனது லட்சியமும். நான் எனது பெர்க்ஷைர் ஹாத்தவே பங்குகளில் 50%ஐ தானமாகக் கொடுத்துவிட்டேன். ஆகையால், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் அறங்காவலர் பதவியிலிருந்து விலகுகிறேன் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபெட் தனது 11வது வயதில் பங்குச்சந்தை முதலீட்டைத் தொடங்கினார். பங்குச்சந்தை முதலீடுகளின் வாயிலாக வந்த வருமானத்துக்கு 13 வயதில் வருமான வரி கட்டினார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தகவலின்படி, இவரது சொத்து மதிப்பு 8,600 கோடி டாலர். ஆனால், தன்னுடைய சொத்தில் 99 சதவிகிதத்தைத் தானமாக வழங்க உறுதி அளித்திருக்கிறார். இதுவரை தனது சொத்திலிருந்து 50% த்தை தானமாகக் கொடுத்திருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் சுந்தர் பிச்சை
July 26, 2025, 2:57 pm
சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
July 26, 2025, 10:11 am
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் மரணம்
July 26, 2025, 9:52 am
பெருவில் பள்ளத்தில் விழுந்த பேருந்து: 15 பேர் மரணம்
July 25, 2025, 4:31 pm