
செய்திகள் இந்தியா
உலகிலேயே கொரோனா சிகிச்சை பொருட்களுக்கு இந்தியாவில்தான் அளவுக்கு அதிகமான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது
டெல்லி:
கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களுக்கு உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு இறக்குமதி வரி விதிக்கப்படுவது ஆய்வு ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சீனாவுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது 7 மடங்கு அதிகமாகவும் ஒன்றிய அரசு இயக்குமதி வரி விதிக்கிறது.
மும்பையில் உள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உதாரணமாக இறக்குமதியாகும் கொரோனா தொடர்பான சிகிச்சை பொருட்களுக்கு இந்திய அரசு 15.2% இறக்குமதி வரி விதிக்கிறது. சீனாவை ஒப்பிடும் போது இது 2 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவை ஒப்பிட்டால் இறக்குமதி வரி இந்தியாவில் 7 மடங்கு அதிகமாகி உள்ளது. வருவாய் குறைவாக ஊழல் ஆப்ஃகானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளை விட சுமார் 60% அளவிற்கு இந்தியாவில் இறக்குமதி வரி அதிகம் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கிருமிநாசினி மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்களுக்கு இந்திய ஒன்றிய அரசு 55.8% இறக்குமதி வரி விதிக்கிறது. ஆனால், சீனாவிலோ வெறும் 11.5% தான் இறக்குமதி வரி. அமெரிக்காவிலோ மிகக்குறைவாக 2% மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் கூட 17.5% மட்டுமே இறக்குமதி வரியாக வசூலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am
கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்
July 29, 2025, 10:21 am