நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிக் கடிதம்: ஹிஷாமுதீன் தரப்பு காவல்துறையில் புகார்

கோலாலம்பூர்:

புதிதாக அமையும் ஆட்சியை வழிநடத்த நடப்பு வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீனை தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ததாகக் கூறப்படும் கடிதம் பொய்யானது என்று தெரியவந்துள்ளது.

இந் நிலையில் இந்தக் கடிதம் தொடர்பாக அவரது பிரதிநிதிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

தாம் புதிதாக ஆட்சி அமைக்கத் தேவைப்படும் எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக ஹிஷாமுதீன் கூறியுள்ளதாகவும், இதுதொர்பாக மாமன்னரை சந்திக்க அவர் நேரம் கேட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஹிஷாமுதீன் தலைமையிலான அமைச்சரவையில்  இடம்பெற்றிருப்பவர்கள் என்று சில பெயர்களும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. இது போலிக் கடிதம் என ஹிஷாமுதீன் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் வெளியுறவு அமைச்சரின்  ஊடகச் செயலாளர் ஹபீஸ் ஆரிபின் Hafiz Ariffin புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், குறிப்பிட்ட அந்தக்  கடிதத்தில் இடம்பெற்றுள்ள கையெழுத்து, ஏற்பு முத்திரை, லெட்டர்பேட் ஆகிய அனைத்துமே போலியானவை என்றும் பொறுப்பற்ற சிலரால் அது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் உறுதி செய்யும்பொருட்டு இந்தப் புகார் அளிக்கப்படுவதாக Hafiz Ariffin தெரிவித்துள்ளார்.

எனவே, அதிகாரிகள் இதுகுறித்து விசாரமணை நடத்தி இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset