நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கொரோனாவுக்கு மத்தியில் இயல்பு வாழ்க்கை: சிங்கப்பூர் அரசின் சீரிய திட்டம்

சிங்கப்பூர்:

எப்போதுதான் கொரோனா கிருமி ஒழியும்? என்று கேட்காத சிங்கப்பூரர்கள் இருக்கமுடியாது.
இந்தக் கேள்விக்கு சிங்கப்பூர் அரசு ஒரே வரியில் திட்டவட்டமாக பதில் அளித்துள்ளது.

அது, கொரோனா நம்மை விட்டுச் செல்லாது என்பதால், அது நமக்கு மத்தியில் இருந்தாலும் நாம் இயல்பாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்," என்பதுதான்.  

இவ்வாறு சளிக் காய்ச்சல், hand foot and mouth disease எவ்வாறு  நம்மிடையே இருந்து வருகின்றனவோ, அதுபோன்று கொரோனா தொற்றும் இருக்கவே செய்யும்.

இந் நிலையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் எவ்வாறு இயல்பு வாழ்க்கையைக் கடைப்பிடிப்பது என்பதற்கான திட்டம் ஒன்றை சிங்கப்பூர் அரசாங்கம் வகுத்துள்ளது. இதற்கேற்ப தனது குடிமக்களைத் தயார்படுத்தப் போவதாகவும்  அந்த அரசு கூறியுள்ளது.



அதன் பின்னர் மக்கள் சுதந்திரமாக வலம் வரலாம். பயணங்கள் மேற்கொள்வது, கடைத்தெருவுக்குச் செல்வது, வேலைக்குப் போவது ஆகிய அனைத்துமே சாத்தியமாகும். யாரையும் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

"கொரோனா நெருக்கடி தொடங்கி 18 மாதங்களாகி விட்டன. சிங்கப்பூரர்கள்  எப்போது, எப்படி  இந்தத் தொற்று முடிவுக்கு வரும்? என்று கேட்கிறார்கள்.

இதில் கெட்ட செய்தி என்னவெனில், கொரோனா இப்போது நம்மை விட்டுச் செல்லாது. நல்ல செய்தி என்றால் கொரோனாவுக்கு மத்தியில் நம்மால் வாழ்க்கையை இயல்பாக வாழமுடியும் என்பதுதான்.

"இதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, குறிப்பிட்ட அளவு தடுப்பூசி போடுவதன் மூலம் இயல்பு வாழ்க்கைக்கு சிங்கப்பூரர்களைத் தயார்படுத்திவிட முடியும்," என்கிறது அந்நாட்டு அரசு.

எப்போது இப்படி ஒரு திட்டத்தை வகுக்க முடிவு செய்யப்பட்டதோ, அப்போதே தடுப்பூசிதான் மக்களைக் காப்பதற்கான வழி என்று அந்த அரசு தீர்மானித்து விட்டது.

தடுப்பூசி போடுவதால் அங்கு கிருமித்தொற்று மற்றும் பரவல் விகிதம் குறைந்து வருகிறது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மீண்டும் கிருமித் தொற்றுக்கு ஆளாகும்போது மிக லேசான அல்லது அறவே அறிகுறிகள் தென்படுவதில்லை.

அடுத்த மாத மத்தியில் சிங்கப்பூர் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போடப்பட்டிருக்கும். தேசிய தினம் வருவதற்கு முன் நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இரு தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்கு. அதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"இனி கொரோனா கிருமித்தொற்று உள்ளவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அதிலிருந்து மீண்டுவர அனுமதிக்கப்படுவர். எனவே நாட்டின் சுகாதார கட்டமைப்பின் மீது எந்தவிதக் அழுத்தமும் இருக்காது. மேலும், அதிக அளவில் பரிசோதனைகள் நடத்துவது, தனிமைப்படுத்துவது அகியவற்றுக்கும் இடமிருக்காது.

"மெல்ல மெல்ல பாதுகாப்பு மேலாண்மை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பெரிய அளவிலான ஒன்று கூடல்களுக்கு அனுமதி வழங்கப்படும். தேசிய தின அணிவகுப்பு, புத்தாண்டுக்கு முந்தைய கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும். முழு முடக்க நிலையால் தொழில்கள் பாதிக்கப்படுமோ என்று அச்சப்படத் தேவையில்லை.

"அனைத்தையும் விட அனைவரும் பயணங்களை மேற்கொள்ள இயலும். தடுப்பூசிச் சான்றிதழ்களுடன் கொரோனாவை நன்கு கட்டுப்படுத்தியுள்ள மற்ற நாடுகளுக்குச் சென்று வரலாம். பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளைச் சென்றடைந்த கையோடு நடத்தப்படும் பரிசோதனையில், தொற்றுப் பாதிப்பு இல்லை என முடிவு வரும் பட்சத்தில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு அவசியம் இருக்காது.

"கொரோனா கிருமித்தொற்றுடன் நம்மால் வாழ முடியுமா என்பது சிங்கப்பூரர்களின் கையில்தான் உள்ளது. கொரோனாவை விட விஞ்ஞானமும் மனிதனின் அறிவாற்றலும் இறுதியில் மேலோங்கி நிற்கும். நமக்கிடையேயான ஒத்திசைவும் சமூக உணர்வும் நம்மை வேகமாக கொண்டு சேர்க்கும். அதற்கு அனைவரும் நமது பங்களிப்பைச் செய்திட வேண்டும்," என்கிறது சிங்கப்பூர் அரசு.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset