நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Gardenia ரொட்டி தொழிற்சாலையில் மனிதவள அமைச்சர் சோதனை

பூச்சோங்:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பணி இடங்களில் இருந்தும்  தொழிற்சாலைகளில் இருந்தும் பரவுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை மனிதவள அமைச்சு கூர்ந்து கவனித்து வருவதோடு அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று தெரிவித்தார். 

இன்று காலை பூச்சோங்கில் இயங்கும் கார்டெனியா ரொட்டி தொழிற்சாலையில் தனது அமைச்சு அதிகாரிகளுடன் அமைச்சர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார். 

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர், "நாடுமுழுவதும் இயங்கும் தொழிற்சாலைகளில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 1175 நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றது. கொரோனா பரவல் தொழிலிடங்களில் இருந்து பரவுவதாக புகார்கள் பெற்று வருவதால் இந்த நடவடிக்கையை மனிதவள அமைச்சு மேற்கொண்டு வருகிறது. 

"சோதனை மேற்கொண்ட 1175 நிறுவனங்கள், அரசு கூறும் விதிமுறைகள் மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால்  ஏறக்குறைய 12 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

"இதன்முலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியும் தொழிற்சாலை நடத்தும் முதலாளிகள் விதிமுறைகள் மீறாமல் நடந்துகொள்வதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நமது அடிப்படை நோக்கம், தொடர் நடவடிக்கை மூலம் வேலை இடங்களிலிருந்து நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதாகும். அதேநேரத்தில் தொழிலாளர்களின் நலன் பேணுவதற்குமான முயற்சியாகும். இதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்" என்றார் அமைச்சர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset