நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹாங்காங்கின் 'ஆப்பிள் டெய்லி' நேற்றுடன் நின்றது; கடைசி நாளில் 10 லட்சம் பிரதி விற்றுத் தீர்ந்தது

ஹாங்காங்: 

ஹாங்காங்கில் 'ஆப்பிள் டெய்லி'யின் கடைசி பிரசுரம் நேற்று வெளியானது. இறுதி விற்பனையாக 10 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றன.

கிழக்கு ஆசியாவில் உள்ள ஹாங்காங்கை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர சீன கம்யூனிஸ்ட் அரசு முயற்சித்து வருகிறது. இதனால் ஹாங்காங்கில் தன்னாட்சி கேட்டு நடத்தப்படும் போராட்டங்கள் அதிகரித்து உள்ளன. போராட்டக்காரர்களை ஒடுக்க சீன அரசு ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில் 'ஆப்பிள் டெய்லி' என்ற நாளிதழை ஜிம்மி லாய் நடத்தி வருகிறார். ஹாங்காங் நிர்வாகத்தில் சீனா தலையிட்டு அத்துமீறுவதாக இவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். ஆத்திரமடைந்த சீன அரசு ஜிம்மி லாயை கடந்த ஆண்டு கைது செய்தது. அவருக்கு 20 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது இரண்டு மகன்களும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் சீன அரசுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்து கட்டுரைகளை வெளியிட்டு வருவதாக கூறி ஆப்பிள் டெய்லியின் ஐந்து ஆசிரியர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். அந்த பத்திரிகையின் 17 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களும் முடக்கப்பட்டன. இதையடுத்து செய்தித்தாள் அச்சிடுவதை நிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்தது.

Apple Daily: Hong Kong pro-democracy paper announces closure - BBC News

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 'சீன கம்யூனிஸ்ட் அரசின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை களை பார்த்து அஞ்ச மாட்டோம்.எனினும் நாளிதழ் வெளியிடுவதை ஜூன் 24 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளோம். 'ஆன்லைனில்' செய்தித்தாளை தினமும் படிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆப்பிள் டெய்லியின் கடைசி பிரசுரம் நேற்று வெளியானது. அதிகாலையிலேயே மக்கள் வரிசையில் நின்று செய்தித்தாளை ஆர்வத்துடன் வாங்கினர். 'வழக்கமாக 80 ஆயிரம் பிரதிகள் விற்கும்; ஆனால் நேற்று மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றன' என ஆப்பிள் டெய்லி நிறுவனம் தெரிவித்தது. ஆப்பிள் டெய்லி நாளிதழ் நிறுத்தப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் 'ஹாங்காங்கில் கருத்து சுதந்திரம் பறிபோயுள்ளது' எனக் கூறிஉள்ளன.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset