
செய்திகள் மலேசியா
இன்று மலேசியாவில் மேலும் 5,812 பேருக்குப் பாதிப்பு: 82 பேர் பலி
கோலாலம்பூர்:
கொரோனா கிருமித்தொற்றுக்கு நாட்டில் மேலும் 82 பேர் பலியாகி உள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் 870 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 433 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
சுகாதார அமைச்சின் அறிவிப்பில் இத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கிருமித்தொற்றால் இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,803 ஆக கூடியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5812 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. அதிகபட்சமாக சிலாங்கூரில் 2187 பேரும், கோலாலம்பூரில் 771, சரவாக்கில் 673, நெகிரியில் 658, பினாங்கு 270 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகக் குறைவாக புத்ராஜெயாவில் 14 பேருக்கு கிருமி தொற்றியது.
நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் இதுவரை 722,659. பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 60,117 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 6,775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 657,739 ஆகும்.