
செய்திகள் மலேசியா
1.7 மில்லியன் மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் இதுவரை 1.7 மில்லியன் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் எட்டப்பட்டுள்ள மிக முக்கிய மைல்கல்லில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
ஜூன் 20 வரையிலான தரவுகளின்படி நாட்டில் 568,282 மூத்த குடிமக்கள் இரு தவணை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டது தெரிய வருவதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹாருன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் மொத்தம் 3.2 மூத்த குடிமக்கள் உள்ளனர். அவர்களில் தடுப்பூசிக்காக 2.6 மில்லியன் பேர் பெயர்களைப் பதிந்துள்ளனர்.
"இவ்வாறு பெயர்களைப் பதிந்துள்ள அனைத்து மூத்த குடிமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என ஊக்குவிக்கப்படுகிறார்கள். மற்றவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்று இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் ரினா ஹாருன் தெரிவித்தார்.
பெருந்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சமூக திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள் மலேசியாவில் அண்மைய சில தினங்களில் தொடர்ந்து எட்டப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm