நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தலிபான் இயக்கத்துடன் இந்தியா பேச்சு?: அனைத்துலக அரங்கில் சலசலப்பு

புதுடெல்லி:

தலிபான் இயக்கத்துடன் இந்திய அரசு ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல் அனைத்துலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்தப் பேச்சுவார்த்தை எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

அண்மையில் கத்தார் நாட்டில் இருதரப்பினரும் சந்தித்துப் பேசியதாகவும் அதன் பின்னணியில் இருப்பது யார் என்பது தெரியவில்லை என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு தாம் ஏற்பாடு செய்ததாக சில மாதங்களுக்கு முன்னர் கத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அச் சமயம் இந்தியா இதை உறுதி செய்யவில்லை.

Qatar Govt Official Says Indian Delegation Visited Qatar to Meet Taliban

இதற்கிடையே தாலிபான் இயக்கத்துடன் இந்திய அரசு மறைமுக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெறும் திட்டம் சுட்டிக்காட்டப்படுகிறது.

அவ்வாறு அமெரிக்கா முழுமையாக வெளியேறும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் இதுவரை ஏற்படுத்தி உள்ள தாக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் உள்ள அம்சங்களையும் இழக்க இந்திய அரசு விரும்பவில்லை என்றும் அதன் காரணமாகவே தாலிபான் இயக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கான தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆப்கானிஸ்தானில் ஏற்படும் மாற்றங்கள் காஷ்மீரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த அனுமதித்துவிடக்கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset