நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் திரும்பலாம்: அரசு அறிவிப்பு

சிங்கப்பூர்:

அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் திரும்ப அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனை சிங்கப்பூரர்கள் வரவேற்றுள்ளனர்.

கொரோனா நெருக்கடி காரணமாக எல்லைகள் மூடப்பட்டு இருப்பதால், சிங்கப்பூரில் பணியாற்ற உரிய 'விசா' பெற்றுள்ள ஏராளமான வெளிநாட்டு ஊழியர்களால் அங்கு செல்ல முடியவில்லை.

இதனால், ஏராளமான நிறுவனங்கள் மனிதவள பற்றாக்குறையால் தவிக்கின்றன. அதேபோல் வெளிநாட்டுப் பணிப்பெண்களின் சேவையைப் பெற்று வந்த ஏராளமான குடும்பங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பு தங்களின் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமையும் என சம்பந்தப்பட்டவர்கள் கூறுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Changi Airport starts testing 9,000 workers after Covid-19 cases; T3  basement 2 to be closed to public, Health News & Top Stories - The Straits  Times

"வெளிநாட்டு ஊழியர்களும் பணிப்பெண்களும் சிங்கப்பூர் வர அனுமதிப்பது அந் நெருக்கடியைக் குறைக்க உதவும்," என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் குறிப்பிட்டதாக தமிழ் முரசு நாளேடு தெரிவித்துள்ளது.

"வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு பாதுகாப்பான முறையில் வரவழைக்கப்படுவதை உறுதிசெய்ய மனிதவள அமைச்சு, வர்த்தக தொழில் அமைச்சு மற்றும் இதர அமைச்சுகளும் ஒன்றாக சேர்ந்து பாதுகாப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும்.

"சிங்கப்பூருக்குள் அவர்கள் நுழையும் கட்டத்தில் தொடங்கி, தனிமைப்படுத்தும் உத்தரவு அணுகுமுறைகள், தங்குவிடுதிகளிலும் வேலையிடங்களிலும் இருக்கும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் ஆகியவற்றை இது உள்ளடக்கும்.

"வெளிநாட்டு ஊழியர்களின் தாய்நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் விகிதமும் அங்குள்ள கொவிட்-19 நிலவரமும் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களை இங்கு அனுமதிப்பதற்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். சிங்கப்பூரின் பொருளாதாரம் மீட்படைய சிங்கப்பூருக்குள் வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிப்பது முக்கியம். பொது மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிசெய்யும் அதே வேளையில் இதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்," என்றும் அமைச்சர் கான் வலியுறுத்தியதாக அந்த ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset