செய்திகள் மலேசியா
இமிக்ரேஷன் அதிகாரிக்கு 35 ஆயிரம் ரிங்கிட் அபராதம்: கோலாலம்பூர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
சட்டத்துக்கு விரோதமாக வியட்னாம் குடிமக்களை மலேசியாவுக்குள் கொண்டுவர லஞ்சம் பெற்ற இமிக்ரேஷன் அதிகாரிக்கு 35 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலிஹான் ஜொஹாரி Solihan Johari என்ற அந்த 37 வயது ஆடவர் தன் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதை ஒப்புக்கொண்டார். மேலும், தமக்கு குறைந்த தண்டனை வழங்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
44 வயதான லியூ Lew என்ற நபர் வியட்னாமில் இருந்து மலேசியாவில் வேலை பார்க்க பலரை அழைத்து வந்துள்ளதாகவும், அது தொடர்பான விசா மற்றும் பெர்மிட்டுகளை மலேசிய குடிநுழைவுத் துறையிடம் இருந்து பெறுவதில் ஒத்துழைக்குமாறு சாலிஹான் ஜொஹாரியைக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக அவருக்கு 21 ஆயிரம் ரிங்கிட் தொகையை லஞ்சமாகக் கொடுத்துள்ளார் Lew. இதற்காக இதற்காக Lew தனது பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குக்கான பணம் எடுக்கும் ATM அட்டையை சாலிஹான் ஜொஹாரியிடம் கொடுத்து வைத்திருந்தார்.
தமது குற்றத்தை ஒப்புக் கொண்ட சாலிஹான் ஜொஹாரி Solihan Johari க்கு நீதிபதி 35 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிப்பதாகவும், அதைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு 27 இமிக்ரேஷன் அதிகாரிகள் உள்ளிட்ட 46 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. நாட்டின் எல்லையை போலி முத்திரைகளை பயன்படுத்தி பல வெளிநாட்டவர்கள் மலேசியாவுக்கு வந்து செல்ல உதவிய சட்டவிரோத கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
