நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரா ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் வசிக்கும் இடத்தில் கிருமித்தொற்று

டோக்கியோ:

ஜப்பானில் உடற்குறையுள்ளோருக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் வசிக்கும் இடத்தில், ஊழியர் ஒருவருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர், ஜப்பானில் வசிப்பவர் இல்லை என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஆனால், அது குறித்து எந்த மேல் விவரமும் வெளியிடப்படவில்லை.

இதுவரை உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடைய 74 பேரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தக்காரர்களும், போட்டி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Paralympics: History, Eligibility and the Sports List

ஆனால், விளையாட்டாளர்கள் வசிக்கும் இடத்தில் இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதில்லை.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி, எதிர்வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

அதில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 160 குழுக்களைச் சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset