
செய்திகள் மலேசியா
மற்றவர் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்: அன்பளிப்பு பொருட்கள் வழங்கல் விழா
கோலாலம்பூர்:
அம்பாங், பண்டான் இண்டாவிலுள்ள திரியும்ப் மண்டபத்தில் பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராஸி மற்றும் அம்பாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து நடத்திய "மற்றவர் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்" எனும் நிகழ்வின் வழி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மெரிடைம் நெட்வோர்க் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தலைமையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும், ஒரு பகுதி உணவுப் பொருட்களை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கபட்டது.
கடந்த தீபாவளி காலங்களில் மட்டுமில்லாது அனைத்து விழாக்காலங்களிலும் மூவின மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றிவருகின்றனர் இந்தக் குழுவினர்.
நாட்டில் மக்களிடையே நிலவி வரும் வறுமையைத் துடைதொழிக்க எடுத்த முயற்சியாக நோய்த் தொற்று காலம் தொடங்கி அதிகமான குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கத் தொடங்கியதாக சமூக சேவையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த டத்தோஸ்ரீ ஜெயந்திரனுக்கும் மலேசிய கெஸட் நிருபர் கஸ்தூரி ஜீவனுக்கும் பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராஸி துணைத் தலைவர் மோகன்ராஜ் வில்லவன் நினைவு அன்பளிப்பை வழங்கி சிறப்பித்தார்.
அம்பாங் வாட்டாரத்தில் இளைஞர்கள் கூட்டணியின் நடைப்பெற்ற இந்நிகழ்வில் அனைவரும் நாட்டின் செயல்பாட்டுத் தர விதிமுறைகளை முறையாக பின்பற்றி கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
August 19, 2025, 6:43 pm
அமெரிக்காவில் 12 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
August 19, 2025, 6:30 pm
அமெரிக்கா வரிவிதிப்பால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி மெதுவடையலாம்: தெங்கு சஃப்ருல் அஜீஸ்
August 19, 2025, 4:37 pm
ஜாரா கைரினா பிரேத பரிசோதனையில் நோயியல் நிபுணர் என்று பொய் கூறிய டிக்டாக் பயனர் MCMCயிடம் பிடிபட்டார்
August 19, 2025, 4:16 pm
தாசேக் சிமெண்ட் தொழிற்சாலையில் ஆள்குறைப்பு: தொழிலாளர்கள் போராட்டம்
August 19, 2025, 11:34 am
வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லோரிகள் மோதல்: ஒருவர் உயிரிழந்தார்
August 19, 2025, 10:54 am
மனைவி கொலை: சிங்கப்பூரருக்கு 72 ஆண்டுச் சிறை
August 19, 2025, 10:35 am
RM98 மில்லியன் மதிப்பிலான செவிலியர் சீருடை துணி தரமற்றதா?: சுகாதார அமைச்சர் பதில்
August 18, 2025, 10:13 pm
ஷாரா மரண வழக்கில் நாளை மறுநாள் 5 சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்
August 18, 2025, 9:09 pm