
செய்திகள் கலைகள்
கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.
கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்டு பாண்டு அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பாண்டு, ‛‛கரையெல்லாம் செண்பகப்பூ'' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஏற்கனவே இவரது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜும் சினிமாவில் பிரபல நடிகராக இருந்ததால் அவர் மூலம் கிடைத்த வாய்ப்பால் சினிமாவில் நுழைந்தார். அதன்பிறகு தனக்கென நடிப்பில் ஒரு பாணியை உருவாக்கி அசத்தி வந்தார். பாட்டுக்கு நான் அடிமை, சின்னத்தம்பி, இது நம்ம பூமி, தெய்வாக்கு, காதல் கோட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். முக்கியமாக திமுகவில் இருந்து எம்ஜிஆர்., விலகி அதிமுக., கட்சியை தொடங்கியபோது, அந்தக் கட்சிக்கு கொடியை வடிவமைத்ததும் பாண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 7:48 am
90களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கோவாவில் ஒன்றுகூடல்
July 28, 2025, 3:38 pm
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
July 28, 2025, 11:18 am
மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
July 26, 2025, 4:11 pm
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன்
July 23, 2025, 4:41 pm
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
July 22, 2025, 10:00 am
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
July 20, 2025, 10:26 am