
செய்திகள் தொழில்நுட்பம்
அமேசன் விண்வெளிச் சுற்றுலா பயண தேதி அறிவிப்பு
வாஷிங்டன்:
அமேசன் நிறுவனர் ஜெப் பெசோஸ் மக்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு தயாராகியுள்ளார்.
தமது புதிய ஷப்பர்ட் ரொக்கெட் மற்றும் கப்சூல் அமைப்பில் வரும் ஜூலை 20 ஆம் தேதி குழு ஒன்றை விண்வெளிக்கு அனுப்ப இருப்பதாக அந்த அமெரிக்க தொழிலதிபரின் புளூ ஒரிஜின் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இந்தப் பயணத்தில் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் இணையத்தின் (ஆன்லைன்) மூலம் ஏலம் விடப்படவுள்ளது.
புதிய ஷப்பர்ட் விமானம் பயணிகளை 100 கிலோ மீட்டர் உயரத்திற்கு அழைத்துச் சென்று திரும்பி வரும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 மீட்டர் உயரம் மற்றும் 4 மீட்டர் அகலம் கொண்ட நியூ ஷப்பர் ராக்கெட் முழுமையான மீள் பயன்பாடு கொண்டதாகவும் செங்குத்து நிலையில் புறப்பட்டு, செங்குத்து நிலையில் தரையிறங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm
மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது
July 2, 2025, 11:43 am
துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am